\
கொரோனாவால் தாய், தந்தை இருவரையும் இழந்த 9,800 குழந்தைகள்

கொரோனாவால் தாய், தந்தை இருவரையும் இழந்த 9,800 குழந்தைகள்

கொரோனாவால் தாய், தந்தை இருவரையும் இழந்த 9,800 குழந்தைகள்
Published on

கொரோனாவால் இந்தியாவில் 9 ஆயிரத்து 800 குழந்தைகள் தாய், தந்தை இருவரையும் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் முதல் இந்தாண்டு டிசம்பர் 7ஆம் தேதி வரை நாடெங்கும் 9 ஆயிரத்து 800 குழந்தைகள் தமது தாய் மற்றும் தந்தை இருவரையுமே கொரோனாவுக்கு பறிகொடுத்துள்ளதாக ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தவிர ஒரு லட்சத்து 32 ஆயிரம் குழந்தைகள் தாய் அல்லது தந்தையை கொரோனாவால் இழந்துள்ளதாகவும் அந்த ஆணையம் கூறியுள்ளது. இதை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, கொரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளை விரைவாக கண்டறிந்து அவர்களுக்கான மறுவாழ்வுக்கு உதவ வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com