\
ஆவடியில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா : 3 பேர் உயிரிழப்பு

ஆவடியில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா : 3 பேர் உயிரிழப்பு

ஆவடியில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா : 3 பேர் உயிரிழப்பு
Published on

ஆவடி மாநகராட்சியில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று மட்டும் 1,562 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 9-வது நாளாக நேற்றும் ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆவடி மாநகராட்சியில் கொரோனாவிற்கு ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஆவடியில் ஒருவரும், பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் ஆவடியில் கொரோனா வைரஸ் உயிரிழப்பு 10 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 282 ஆக அதிகரித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com