கொரோனாவால் மேற்கு வங்கத்தில் 75% மாணவர்கள் ஜேஇஇ தேர்வை எழுத முடியவில்லை - மம்தா
மேற்கு வங்கத்தில் மருத்துவ சேர்க்கைக்கான ஜேஇஇ மெயின்ஸ் 2020 தேர்வுக்கு 4,652 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அரசு சகல பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருந்த போதிலும் நேற்று நடந்த தேர்வில் 1,167 பேர் மட்டுமே பங்கேற்றதாக முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேலும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 75 சதவீதம் பேர் ஜேஇஇயில் பங்கேற்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். கொரோனா தொற்றுக் காரணமாக நேற்று நடந்த தேர்வில் அவர்களில் பாதிபேர் மட்டுமே மற்ற மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வு எழுத முடிந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
மாநில அரசு தேர்வு எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்த போதிலும், தேர்வின் முதல் நாளான செவ்வாயன்று விண்ணப்பித்திருந்த 4,652 பேரில், 1,167 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றதாக அவர் கூறியுள்ளார். மேலும் கொரோனா நோய்த்தொற்றின் பரவல் காரணமாக மற்ற மாநிலங்களிலும் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தேர்வில் பங்கேற்க முடியவில்லை. மாணவர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர் என்றும் மம்தா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தொற்றுநோய்க்கு மத்தியில் தேர்வை நடத்தவேண்டாம் என ஏற்கனவே மம்தா மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.