கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடரும் கொரோனா தொற்று.. இதுவரை 7 பேருக்கு பாதிப்பு

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடரும் கொரோனா தொற்று.. இதுவரை 7 பேருக்கு பாதிப்பு
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடரும் கொரோனா தொற்று.. இதுவரை 7 பேருக்கு பாதிப்பு

சென்னையில் இருந்து கொடைக்கானல் திரும்பிய மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோன தொற்று இல்லாமல் 75 நாட்கள் வரை கட்டுப்பாடுடன் இருந்த கொடைக்கானலில், தொடர்ந்து சில நாட்களாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத, சென்னையில் இருந்து வந்த மாணவி ஒருவருக்கு முதல் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சில நாட்கள் பாதிப்பு இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், நேற்று சென்னையில் இருந்து, சொந்த ஊரான கீழ்மலை பூலத்தூருக்கு திரும்பிய தம்பதியர் இருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் தாக்கம் குறையும் முன்னரே, நகரில் மிகவும் நெருக்கமாக மக்கள் வசிக்கும், அண்ணாநகர் பகுதியில் மூவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மூவரும் பொது முடக்கம் அறிவிப்பதற்கு முன்னர் அவர்களது சொந்த ஊரான சென்னைக்கு சென்றதாகவும், ஜூன் 1 ஆம் தேதிக்கு பின்னர்  அரசால் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன், இ பாஸ் பெற்றுக்கொண்டு கொடைக்கானல் திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

புதிதாக வந்ததால் அவர்களது ரத்த மாதிரியை எடுத்து, சோதனைக்கு மருத்துவக்குழுவினர் அனுப்பியதில், அவர்கள் மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர்களை மீட்டு மேல் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கோட்டாட்சியர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று இல்லாமல் இருந்த கொடைக்கானலில் கடந்த சில நாட்களில் தொற்று எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது மலை மக்களிடயே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com