தமிழகத்தில் இன்று 646 பேருக்கு கொரோனா - சென்னையில் மட்டும் 509..!
தமிழகத்தில் இன்று 646 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 646 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 611 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 9,342 உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இதுவரை மொத்தம் 127 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
சென்னையில் மட்டும் இன்று 509 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 11,640 ஆக உயர்ந்துள்ளது.