“45 அடி தூரத்திலும் பரவிய கொரோனா.. 6 அடி இடைவெளி போதுமா?” எச்சரிக்கும் நிபுணர்கள்!!

“45 அடி தூரத்திலும் பரவிய கொரோனா.. 6 அடி இடைவெளி போதுமா?” எச்சரிக்கும் நிபுணர்கள்!!
“45 அடி தூரத்திலும் பரவிய கொரோனா.. 6 அடி இடைவெளி போதுமா?” எச்சரிக்கும் நிபுணர்கள்!!

கொரோனா பரவலைத் தடுக்க சமூக விலகல் அதாவது 6 அடி இடைவெளி விட்டு நடக்கவேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஆனால் 6 அடியைத் தாண்டியும் வைரஸால் பரவமுடியும் என பல சான்றுகளை ஆராய்ச்சி வல்லுநர்கள் சிலர் தற்போது வெளியிட்டு வருகின்றனர். மேலும் இந்த தூரத்தை மறுமதிப்பீடு செய்துள்ளனர். 6 அடி இடைவெளி விட்டு... என்பது அவ்வளவு எளிதானதல்ல என பி.எம்.ஜே இதழில் இந்த வாரம் வெளியான ஒரு பகுப்பாய்வில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சில நிபுணர்கள் இடைவெளியை கடைபிடிக்க 6 அடி ஒரு தொடக்கமாக அமைந்தாலும், மோசமான காற்றோட்டம் உள்ள பகுதிகளில் இடைவெளி கட்டாயம் அவசியம் எனக் கூறுகின்றனர்.

காற்று சுழற்சி, காற்றோட்டம், கூட்டத்தின் அடர்த்தி, மக்கள் முகமூடி அணிந்திருக்கிறார்களா, அவர்கள் அமைதியாக இருக்கிறார்களா, பேசுவது, கூச்சலிடுவது அல்லது பாடுவது போன்ற பல காரணிகளைக் கருத்தில்கொள்வது ஆறு அடி போதுமானதா என்பதை மதிப்பிடுவதில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஜெர்மன் உயிரியல் ஆராய்ச்சியாளர் கார்ல் ஃப்ளெக் என்பவரின் ஆராய்ச்சியில்தான் இந்த 6 அடி இடைவெளி என்பது உருவானது. 1800களில் நுண்ணுயிர்க்கொண்ட நீர்த்துளிகள் பயணிக்கக்கூடிய அளவை இது பரிந்துரைத்தது. ஆனால் கண்ணுக்குத் தெரியாத துகள்களை அவரது கணிப்பு தவறவிட்டது. உடலின் திரவம் மற்றும் வைரஸ்கள்தான் காற்றில் ஏரோசல்களாக மிதக்கின்றன. வான்வெளி பரவுதல் இன்னும் உறுதிப்படுத்தப் படாத நிலையில் கொரோனா வைரஸ் ஒரு நீராவியாக காற்றில் பறந்தால் அதன் தாக்கத்தை கணிக்க முந்தைய அனுமானங்கள் போதுமானதாக இருக்காது. ஆனால் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அவை 6 அடியைத் தாண்டி பரவுவதை சான்றுகள்மூலம் நிரூபித்துள்ளனர்.

தூரம் மட்டும் ஏரோசல் பிரச்னையை ஒருபோதும் தீர்க்காது. ஒரே அறையில் பல அடிகள் இடைவெளிவிட்டு இருந்தாலும், நோய்த்தொற்று ஏற்படலாம் என்கிறார் கொலராடோ பலகலைக்கழக நிபுணர் ஜோஸ் - லூயிஸ் ஜிமெனஸ். இதற்கு சான்றாக வாஷிங்டனில் பாடகரிடமிருந்து 45 அடி தூரத்தில் இருந்த நபருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது, அவர் 52 பேருக்கு வைரஸை பரப்பினார் என்று கூறுகிறார்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் சமூக இடைவெளியாக மற்றவர்களிடமிருந்து 6 அடி தூரம் விலகி இருக்கக் கூறுகின்றன. உலக சுகாதார அமைப்பு, 1 மீட்டர் அல்லது 3 அடி தூரத்தைப் பரிந்துரைத்துள்ளது. சில ஐரோப்பிய நாடுகள், 1.5 மீட்டர், கிட்டத்தட்ட 5 அடி, மற்ற நாடுகள் 2 மீட்டர், அதாவது 6.5 அடி இடைவெளியை வலியுறுத்துகின்றன. தொற்றுநோயின் ஆரம்பத்தில், யு.கே-இல் 2 மீட்டர் இடைவெளி அமல்படுத்தப்பட்டது. ஆனால் விற்பனையாளர்கள் மற்றும் உரிமையாளர்களின் லாபத்தை இது குறைப்பதாக அவர்கள் கொடுத்த அழுத்தத்தின்பேரில் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த இடைவெளியை ‘ஒன் மீட்டர் ப்ளஸ்’ என மாற்றினார்.

இந்த தொற்றுநோயின் மற்றொரு முக்கிய காரணி காற்றின் இயக்கம். தூரத்தைப் பற்றி மட்டும் சிந்திக்காமல் காற்றோட்டத்தைப் பற்றி சிந்திப்பதும் மிக அவசியமானது என மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் தொற்றுநோய் திரவ இயக்கவியல் குறித்து ஆய்வு செய்யும் பி.எம்.ஜே அறிக்கையின் ஆசிரியர் லிடியா போரூபா கூறியுள்ளார்.

இவர் தனது குழுவுடன் சேர்ந்து அதிக ஆபத்து பற்றிய விளக்கம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். சில சூழல்களின் 6 அடி தூரம் என்பது பாதுகாப்பானது இல்லை என்று கூறுகிறார். நல்ல காற்றோட்டமாக இடத்தில் இருக்கும்போது நோய்க்கிருமியின் தாக்கம் குறைவாக இருப்பதாகவும், அதுவே சிறிய அல்லது மூடிய இடத்தில் இருக்கும்போது நோய்க்கிருமி அதிகளவில் பரவுவதாகவும் கூறுகிறார். சிறிய இடமோ, நல்ல காற்றோட்டமான இடமோ, எதுவாக இருந்தாலும் கொரோனா நோய்க்கிருமி எந்த அளவில் எந்த நேரத்தில் எப்படி பரவுகிறது என்பது பற்றி சரியாக கணிக்கப்படவில்லை எனவும், உடலின் நோயெதிர்ப்பு சக்தி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவது என்பது பொருத்தும் நோய்க்கிருமியின் தாக்கம் மாறுவதாக அவர் கூறுகிறார்.

நோய்த் தொற்று இருப்பவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் வைரஸை காற்றில் பரவ விடுகின்றனர். அதை சுவாசிப்பதன்மூலம் யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம் என்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com