முதன்முறையாக இன்று 6,472 பேருக்கு கொரோனா : 88 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்கள் கொண்ட அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று வெளியிடப்பட்ட தகவலில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 5,210 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,36,793 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,336 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 90,900 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,232 பேர் உயிரிழந்துள்ளனர்.

