\
தமிழகத்தில் இன்று 5,546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... 70 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று 5,546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... 70 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று 5,546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... 70 பேர் உயிரிழப்பு
Published on

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்கள் கொண்ட அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று வெளியிடப்பட்ட தகவலில் ஒரே நாளில் 5,546 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,91,943 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 5,501 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 70 பேர் உயிரிழந்துள்ளனர். 46,281 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் ஆறாவது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இன்று மட்டும்  1,277 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இதுவரை 1,66,029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,51,641 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 11,193 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com