தமிழகத்தில் இன்று 5,976 பேருக்கு கொரோனா : 6,334 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று 5,976 பேருக்கு கொரோனா : 6,334 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று 5,976 பேருக்கு கொரோனா : 6,334 பேர் டிஸ்சார்ஜ்
Published on

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,976 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்கள் கொண்ட அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று வெளியிடப்பட்ட தகவலில் 5,976 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,51,827 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 83,699 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று மட்டும் 6,334 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,92,507 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை இன்று மட்டும் 992 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,39,720 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 79 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 7,687 பேர் உயிரிழந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com