கொரோனா வைரஸ்
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு: முழு நிலவரம்..!
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு: முழு நிலவரம்..!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,693 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4,97,006லிருந்து 5,02,759ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சிகிச்சைப்பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,717 ஆக உள்ளது. இதனால் மொத்தம் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 4,47,366 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,381 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 74 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.