\
இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 445 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 445 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 445 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
Published on

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 445 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை இந்தியாவில் 4.25 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 445 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரே நாளில் 14,821 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,699 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் சதவீதம் 55.77 ஆக உள்ளது. அதாவது, 2,37,196 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் நான்காவது இடத்தில் உள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com