கொரோனாவுக்கு 4 மாத குழந்தை மரணம் : திருவாரூரில் சோக சம்பவம்

கொரோனாவுக்கு 4 மாத குழந்தை மரணம் : திருவாரூரில் சோக சம்பவம்

கொரோனாவுக்கு 4 மாத குழந்தை மரணம் : திருவாரூரில் சோக சம்பவம்
Published on

திருவாரூர் மாவட்டத்தில் 4 மாத பெண் குழந்தை கொரோனா வைரஸுக்கு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கொரோனா வைரஸால் தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் வெளியான தகவலின்படி, 114 பேர் இறந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,041 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொடூர கொரோனா வைரஸ் குழந்தைகள், இளம் வயதினர், முதியவர்கள் என அனைவரது உயிர்களையும் பறித்து வருகிறது.

அந்த வகையில் திருவாரூரைச் சேர்ந்த 4 மாத பெண் குழந்தை கொரோனா வைரஸால் உயிரிழந்த தகவல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த குழந்தை, ஜூன் 24ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு இறந்திருக்கிறது. அந்தக் குழந்தைக்கு நிமோனியா மற்றும் ஆட்டிசம் குறைபாடு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com