\
மதுரை : கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவந்த 4 பேர் உயிரிழப்பு

மதுரை : கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவந்த 4 பேர் உயிரிழப்பு

மதுரை : கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவந்த 4 பேர் உயிரிழப்பு
Published on: 

மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியோடு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தில் நேற்றுவரை 3,473 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 51 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அரசு கொரேனா சிறப்பு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியோடு சிகிச்சை பெற்றுவந்த செல்லூர் பகுதியை சேர்ந்த 57 வயது பெண், 39 வயது ஆண், மதுரை விளாங்குடியை சேர்ந்த 65 வயது மூதாட்டி, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த 73 வயது முதியவர் என 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com