தமிழகத்தில் இன்று 4,328 பேருக்கு கொரோனா உறுதி : 66 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று 4,328 பேருக்கு கொரோனா உறுதி : 66 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று 4,328 பேருக்கு கொரோனா உறுதி : 66 பேர் உயிரிழப்பு..!
Published on

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,328 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாள்தோறும் நான்காயிரத்திற்கும் மேல் அல்லது நான்காயிரத்திற்கு கீழ் என கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2வது நாளாக இன்று மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, இன்று ஒரே நாளில் 4,328 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 3,035 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 92,567 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,140 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 78,573 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 2,032 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com