தமிழகத்தில் மேலும் கொரோனாவுக்கு 37 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா நொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அந்த வகையில், புதிதாக 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 1487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசு மருத்துவமனையில் 30 பேரும், தனியார் மருத்துவமனையில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் எவ்வித இணை நோய்களும் இல்லாமல் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் பெரும்பாலும் 20, 21, 22 ஆகிய தேதிகளில் நிகழ்ந்தவை என குறிப்பிடப்பட்டுள்ளது. 18 ஆம் தேதி இறந்த சென்னையைச் சேர்ந்த 50 வயது பெண் குறித்த தகவலும் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 794 பேர் உயிரிழந்துள்ளனர்.