கொரோனா வைரஸ்
கர்நாடகாவிலிருந்து மேல்மருத்துவத்தூர் சென்று திரும்பிய 35 பக்தர்களுக்கு கொரோனா
கர்நாடகாவிலிருந்து மேல்மருத்துவத்தூர் சென்று திரும்பிய 35 பக்தர்களுக்கு கொரோனா
கர்நாடகாவிலிருந்து மேல்மருவத்தூருக்கு சென்று திரும்பிய 30க்கும் மேற்பட்ட கர்நாடக பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன் மொத்த 3 பேருந்துகளில் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்திலிருந்து மேல்மருவத்தூருக்கு 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பயணித்திருந்தனர். இதில் 2 பேருந்துகளில் பயணித்தோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. அதில் 35 பேருக்கு, இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும் ஓரு பேருந்து பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்பட உள்ளது. அதன்முடிவில் கூடுதலாகவும் சிலருக்கு தொற்று உறுதிசெய்யப்படலாம் என கணிக்கப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி: பெரம்பலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா