கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சைப் பெற்ற 30 நபர்கள் டிஸ்சார்ஜ்
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சித்த மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 30 நபர்கள் வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, அரசானாது பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி உள்ளிட்ட சிகிச்சை முறைகளிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது.
அந்த வகையில் சென்னையில் உள்ள சித்த மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 30 நபர்கள் தற்போது வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறை செயலர் தெரிவித்துள்ளார். மேலும் கூறிய அவர் “இந்த 30 நபர்களில் ஆறு பேருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அப்போது அவர்களுக்கு கொரோனா இல்லை என்பது தெரிய வந்தது என்றும் கூறினார். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 100 பேர் ஆயுர் வேதா, ஹோமியோபதி உள்ளிட்ட சிகிச்சை முறைகளில் சிகிச்சைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.