இந்தியாவில் புதிதாக 30,948 பேருக்கு கொரோனா தொற்று: 403 பேர் பலி

இந்தியாவில் புதிதாக 30,948 பேருக்கு கொரோனா தொற்று: 403 பேர் பலி
இந்தியாவில் புதிதாக 30,948 பேருக்கு கொரோனா தொற்று: 403 பேர் பலி

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு  31ஆயிரத்துக்கும் கீழ் குறைந்திருக்கிறது. இன்று 30,948 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,948 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 3 கோடியே 24 லட்சத்து 24 ஆயிரத்து 234 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 403 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டின் மொத்த கொரோனா  உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 34 ஆயிரத்து 367 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 38 ஆயிரத்து 487 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 16 லட்சத்து  36 ஆயிரத்து 469 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 53 ஆயிரத்து 398 ஆக உள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் 58 கோடியே 14 இலட்சத்து 89 ஆயிரத்து 377 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com