அரியலூர்: அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மேலும் 3 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

அரியலூர்: அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மேலும் 3 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

அரியலூர்: அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மேலும் 3 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

அரியலூர் அரசு மேல்நிலைபள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர், 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மற்றும் மாணவி இருவர் என மொத்தம் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுகாதாரத்துறையால் இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து கொரோனாத் தொற்றால் பாதிக்கபட்ட பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிற்குள்ளான 9 மாணவர்களில் 8 மாணவர்கள் மாவட்ட தலைநகரான அரியலூரில் இயங்கிவரும் பள்ளிகளில் பயின்றுவரும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com