இன்று ஒரே நாளில் 3,095 பேர் கொரோனாவிலிருந்து டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,095 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி தமிழகத்தில் 4,343 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98,382 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 33,488 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இன்று மட்டும் 3,095 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 56.021 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் 41,047 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 57 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,321 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 2,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 62.598 ஆக உயர்ந்துள்ளது.