\
இறந்தவருக்கு 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தியதாக வந்த குறுஞ்செய்தி - அதிர்ச்சியில் குடும்பம்

இறந்தவருக்கு 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தியதாக வந்த குறுஞ்செய்தி - அதிர்ச்சியில் குடும்பம்

இறந்தவருக்கு 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தியதாக வந்த குறுஞ்செய்தி - அதிர்ச்சியில் குடும்பம்
Published on

முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியபோதே இறந்தவர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக வந்த குறுஞ்செய்தி குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

திருச்சி உறையூர் பெஸ்கி தெருவில் வசித்து வந்தவர் செல்வராஜ். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார். தடுப்பு செலுத்தி கொண்டே நான்கு நாட்களிலேயே இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனா தொற்று ஏற்பட்டவுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிறகு சிகிச்சை பலனின்றி 15.05.2021 அன்று உயிரிழந்தார். இவருடைய கைபேசியை அவருடைய மகன் வைத்துள்ளார். இன்று செல்வராஜ் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக அவருடைய கைபேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

செல்வராஜுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக விபரங்களுடன் வந்த குறுஞ்செய்தி அவரின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

- சார்லஸ் 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com