கொரோனா: சென்னையில் இன்று மட்டும் 26 பேர் உயிரிழப்பு
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 26 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,449 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 666 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,271 ஆக உள்ளது.
இந்நிலையில் சென்னையில் மேலும் 26 பேர் இன்று கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 5 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும் கொரோனாவால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதேபோல் கேகேநகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் 2 பேரும் ரயில்வே மருத்துவமனையில் 3 பேரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 பேரும் அப்போலோவில் ஒருவரும் கொரோனாவுக்கு சிகிச்ச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

