\
தமிழகத்தில் ஒருநாளில் 2,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 49 பேர் பலி

தமிழகத்தில் ஒருநாளில் 2,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 49 பேர் பலி

தமிழகத்தில் ஒருநாளில் 2,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 49 பேர் பலி
Published on: 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 55-வது நாளாக ஒருநாள் கொரோனா மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது.

தமிழ்நாட்டில் 1,46,665 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 25,28,806 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஏற்கெனவே 153 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 24 மணிநேரத்தில் 12 வயதிற்குட்பட்ட 110 சிறார்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு தொற்று அதிகரித்து வந்தநிலையில் தற்போது குறைந்துவருகிறது.

கொரோனாவால் மேலும் 49 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,606 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 38 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 29,950ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 3,006 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,65,250 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com