\
தமிழகத்தில் இன்று 2,312 பேருக்கு கொரோனா உறுதி - 46 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று 2,312 பேருக்கு கொரோனா உறுதி - 46 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று 2,312 பேருக்கு கொரோனா உறுதி - 46 பேர் உயிரிழப்பு
Published on

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 56-வது நாளாக ஒருநாள் கொரோனா மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது.

தமிழ்நாட்டில் 1,48,778 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 25,31,118 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஏற்கெனவே 148 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனாவால் மேலும் 46 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,652 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 28 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 29,230ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 2,986 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,68,236 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com