கொரோனா பாதிப்பு எதிரொலி: சுற்றுலாத்துறையில் எத்தனை பேருக்கு வேலையிழப்பு?

கொரோனா பாதிப்பு எதிரொலி: சுற்றுலாத்துறையில் எத்தனை பேருக்கு வேலையிழப்பு?
கொரோனா பாதிப்பு எதிரொலி: சுற்றுலாத்துறையில் எத்தனை பேருக்கு வேலையிழப்பு?

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளின் காரணமாக சுற்றுலாத்துறை சார்ந்த 2 கோடியே 15 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துப் பேசிய மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, கொரோனா பரவலுக்கு முன்பு நாடுமுழுவதும் 3 கோடியே 80 லட்சம் பேர் சுற்றுலாத்துறையைச் சார்ந்திருந்ததாக குறிப்பிட்டார். இதில், கொரோனா முதல் அலையின்போது ஒரு கோடியே 45 லட்சம் பேரும், இரண்டாம் அலையின்போது 52 லட்சம் பேரும், மூன்றாம் அலையின்போது 18 லட்சம் பேரும் வேலையிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கொரோனாவின் மூன்று அலைகளின் காரணமாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே சுற்றுலாத்துறையும், அதன் மூலம் ஈட்டப்பட்டு வந்த வருவாயும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்த்தார். இந்த நிலையிலிருந்து மீள்வதற்காக வட்டியில்லா கடனாக சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ஒரு லட்சம் ரூபாயும் இந்தத் துறையைச் சார்ந்துள்ள பிறருக்கு பத்து லட்சம் ரூபாயும் வழங்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com