தஞ்சை: மேலும் 20 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு!
ஒரத்தநாடு கால்நடை கல்லூரி மாணவர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் ஏற்கெனவே 13 பள்ளிகளை சேர்ந்த 187 மாணாக்கர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 115 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 4 கல்லூரியை 18 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை கல்லூரி மாணவர் ஒருவருக்கு ஏற்கெனவே தொற்று உறுதியாக இருந்த நிலையில் பரிசோதனை செய்த 430 நபர்களில் 20 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பள்ளி மாணவர்களில் பாதிப்பு எண்ணிக்கை 187 ஆகும் கல்லூரி மாணவர்களின் பாதிப்பு எண்ணிக்கை 38 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த மாணவர்களின் பாதிப்பு 225 ஆக உயர்வு கண்டுள்ளது.