\
புதுச்சேரியிலும் பரவியது ஒமைக்ரான்; 2 பேருக்கு தொற்று உறுதி

புதுச்சேரியிலும் பரவியது ஒமைக்ரான்; 2 பேருக்கு தொற்று உறுதி

புதுச்சேரியிலும் பரவியது ஒமைக்ரான்; 2 பேருக்கு தொற்று உறுதி
Published on

புதுச்சேரி மாநிலத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் 80 வயது முதியவர் மற்றும் 20 வயது இளைஞருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. புதுச்சேரியில் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில் தற்போது 2 பேருக்கு ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளான இருவரும் வெளிநாடுகளுக்கு செல்லாதவர்கள் என தெரியவந்துள்ளதால், கட்டுப்பாடுகள் அங்கு விரைவில் தீவிரப்படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்தியாவில் ஒமைக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 653ஆக இன்று காலை உயர்ந்திருந்தது. அவர்களில் 186 பேர் இதுவரை குணமடைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வழியாக தெரிவித்திருந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com