புறநகர் ரயிலில் பயணிக்க 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் - தெற்கு ரயில்வே

புறநகர் ரயிலில் பயணிக்க 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் - தெற்கு ரயில்வே

புறநகர் ரயிலில் பயணிக்க 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் - தெற்கு ரயில்வே
Published on

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே விதித்திருக்கிறது. அதன்படி, சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என அறிவித்திருக்கிறது. மேலும், ரயில் நிலையத்தில் முகக்கவசம் அணியாமல் நடமாடினால் ரயிலில் பயணம் செய்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும், இந்த புதிய கட்டுப்பாடுகள் ஜனவரி 10ஆம் தேதிமுதல் அமலுக்கு வரும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. அதேபோல், UTS செயலி வழியாக 31ஆம் தேதி வரை புறநகர் ரயிலில் பயணம் மேற்கொள்வோர் முன்பதிவு செய்யமுடியாது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com