தமிழகம்: ஒரேநாளில் 1,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,947இல் இருந்து 1,986ஆக அதிகரித்திருக்கிறது.
தமிழகத்தில் 1,60,171 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 1,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 68 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்துவந்த நிலையில் 3ஆவது நாளாக அதிகரித்து வருகிறது. 12 வயதிற்குட்பட்ட 104 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
சென்னையில் நேற்று 215 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று 204 ஆக குறைந்துள்ளது. சென்னையில் 27ஆம் தேதி 139ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 204ஆக உயர்ந்துள்ளது. கோவையில் 27ஆம் தேதி 169ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 246ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் 27ஆம் தேதி 132ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 165ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் 26 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,076ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 19 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் இணைநோய்கள் இல்லாதோர் 9 பேர். 50 வயதுக்குட்பட்டோர் 5 பேர்.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 20,716ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 2,178 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,04,805 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதேசமயம் 24 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏதும் இல்லை.