கொரோனா : சென்னையில் ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு

கொரோனா : சென்னையில் ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு

கொரோனா : சென்னையில் ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு
Published on

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 19 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை.

கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே சாத்தியம் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்து வருகிறார். தமிழகத்தில் 34,914 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 307 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 19 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 9 பேரும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 6 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com