\
தமிழகத்தில் மேலும் 1,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 1,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 1,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on: 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 63-வது நாளாக ஒருநாள் கொரோனா மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது.

1,35,008 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் 1,828, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 2 பேர் என கடந்த 24 மணி நேரத்தில் 1,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 25,44,870 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஏற்கெனவே 133 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனாவால் மேலும் 24 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,862 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 18 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். இணைநோய்கள் இல்லாத 3 பேரும், 50 வயதுக்குட்ட 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 24,816ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 2,516 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,86,192 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com