தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,37,292 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 1,785 பேருக்கு கொரோனா கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 164 பேருக்கும், ஈரோட்டில் 127 பேருக்கும், சென்னையில் 122 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து 66 வது நாளாக, தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. 1,800க்கும் குறைவாக இன்று பதிவாகியிருப்பதை தொடர்ந்து மொத்த பாதிப்பு 25,50,282 என்றாகியுள்ளது.

இந்த 24 மணிநேரத்தில்மட்டும், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 26 பேர் தமிழ்நாட்டில் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,937 என உயர்ந்துள்ளது.

மற்றொருபக்கம், கடந்த 24 மணிநேரத்தில் 2,361 பேர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தனர். இதன்மூலம், மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 22,762 என்றுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com