இந்தியாவின் கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?

இந்தியாவின் கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?
இந்தியாவின் கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?

இந்தியா முழுவதும் 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள் படி நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் மட்டும் 2,380 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது நேற்றைய கொரோனா பாதிப்பை காட்டிலும் அதிகமாகும். அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,231 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 4,25,14,479 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இன்று மட்டும் 56 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,22,062 ஆக அதிகரித்துள்ளது.



நாடு முழுவதும் தற்போது 13,433 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.76 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.21 ஆகவும் உள்ளது. நேற்று மட்டும் 15,47,288 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தமாக 1,87,07,08,111 டோஸ்கள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளன.

இன்றைய பாதிப்பில் டெல்லியில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதேபோன்று மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வருவதாக  தெரிவித்துள்ள மத்திய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com