\
தமிழகத்தில் 1200க்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு

தமிழகத்தில் 1200க்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு

தமிழகத்தில் 1200க்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு
Published on

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,252இல் இருந்து 1,146ஆக குறைந்துள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது.

81,145 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,146ஆக உள்ளது. சென்னையில் ஏற்கெனவே 285 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில் இன்று 262ஆக குறைந்துள்ளது. கொரோனாவால் மேலும் 8 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,970ஆக உயர்ந்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் 6 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23,772இல் இருந்து 20,681ஆக குறைந்துள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 4,229 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 33,84,276 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com