5,000 கோழிகள் இருந்த அரசு கோழிபண்ணையில் பறவைக்காய்ச்சல்... அதிர்ச்சியில் அதிகாரிகள்!

5,000 கோழிகள் இருந்த அரசு கோழிபண்ணையில் பறவைக்காய்ச்சல்... அதிர்ச்சியில் அதிகாரிகள்!
5,000 கோழிகள் இருந்த அரசு கோழிபண்ணையில் பறவைக்காய்ச்சல்... அதிர்ச்சியில் அதிகாரிகள்!

கேரளாவில் கோழிக்கோட்டில் பறவை காய்சல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் இது பரவக்கூடிய அச்சம் நிலவி வருகிறது.

கேரளாவில் அரசு பண்ணை ஒன்றில் கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் ஏற்பட்டிருந்திருக்கிறது. இதன் காரணமாக சுமார் 1,800 கோழிகள் உயிரிழந்திருக்கிறது. இதனை கேரள அரசாங்கம் உறுதி செய்துள்ளது. கேரள விலங்குகள் நலத்துறை அமைச்சர், உடனடியாக இதுகுறித்து ஆராய்ந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.

குறிப்பிட்ட இந்த பண்ணையில் 5,000 க்கும் மேற்பட்ட கோழிகள் இருந்தன. அவற்றில் 1,800 இதுவரை தொற்று காரணமாக இறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தியால் கேரளாவின் பிற கோழிப்பண்ணையினரும் அச்சம் அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளின்படி அவசரத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேரள கால்நடைத் துறை அமைச்சர் ஜே.சிஞ்சு ராணி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com