ஷக்தியை வெளியே தள்ளிய ரங்கநாயகி, யமுனா கல்யாணத்தில் பிரச்சனை - மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்

ஷக்தியை வெளியே தள்ளிய ரங்கநாயகி, யமுனா கல்யாணத்தில் பிரச்சனை - மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்
ஷக்தியை வெளியே தள்ளிய ரங்கநாயகி, யமுனா கல்யாணத்தில் பிரச்சனை - மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.45 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் 'மீனாட்சி பொண்ணுங்க'.

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரங்கநாயகி வந்து பத்திரத்தை கேட்க, சக்தி 'இது எங்கள் பத்திரத்தை வைத்து தான் பணம் வாங்கினோம்' என்று சொல்ல, நகை கடைக்காரர் அது ரங்கநாயகியின் பத்திரம் தான் என்று சொல்ல, ‘வெற்றி தான் நகையும், பணமும், கொடுக்க சொன்னார் இதை யாரிடமும் சொல்ல வேண்டாம்’ என்று சொன்னார் என்று கூறுகிறார்.

அடுத்து வெற்றி ‘நான் உதவி செய்யத்தான் சொன்னேன் பத்திரத்தை மாற்றியது நான் இல்லை’ என்று சொல்ல, பூஜா ரங்கநாயகியை ஏற்றிவிட்டு சண்டையை மேலும் பெரிதாக்குகிறாள்.

இதற்கெல்லாம் காரணமான சக்தியை திட்டுகிறாள் மீனாட்சி. புஷ்பா நகைக்கடைக்காரரிடம் நகையை திருப்பி வாங்குங்கள் என்று கூற, யமுனா தான் அணிந்திருந்த நகைகளை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுகிறாள். மீதி நகையை போட்டு இருக்கும் கோகிலாவும் எல்லோர் முன்னிலையிலும் அவமானப்பட்டு நகையை கழட்டி கொடுக்கிறாள்.

மீதமுள்ள 25 லட்சம் பணத்தையும் கேட்க அதை கொடுத்து விடுகிறோம் என்று சக்தி சொல்ல, இன்னும் ஒரு மணி நேரத்தில் என் பத்திரம் வந்தாக வேண்டும் என்று ரங்கநாயகி சொல்லி விட்டு புறப்பட்டு போகிறாள்.

இதையெல்லாம் வெற்றி தான் செய்திருப்பான் என்று சக்தி கோபத்தில் வெற்றியை திட்டுகிறாள். மேலும் சக்தி கோகிலாவிடம் கல்யாணத்தை நிறுத்த வேண்டாம் என்று காலில் விழுந்து கெஞ்சுகிறாள்.

பத்திரத்தை மாற்றிக் கொடுத்துவிட்டு நகை பணத்தை நான் ஏற்பாடு செய்கிறேன் என்ற பொறுப்பு எடுத்துக் கொண்டு வேகமாக வீட்டுக்கு போகிறாள்.

ஆனால் ரங்கநாயகி சக்தியை வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கிறாள். என் பத்திரத்தை தேடி கொடுத்து விட்டு உங்கள் பத்திரத்தை வாங்கிக் கொண்டு வந்து விடுகிறேன் என்று சொல்லியும் ரங்கநாயகி சக்தியை வீட்டில் இருந்து வெளியே தள்ளி விட சக்தி ஒன்றும் செய்ய முடியாமல் பரிதவித்து நிற்கின்றாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com