அமுதாவை கிண்டலடித்த தீபா, வசமாக சிக்கிய செந்தில் - அமுதாவும் அன்னலட்சுமியும் அப்டேட்

அமுதாவை கிண்டலடித்த தீபா, வசமாக சிக்கிய செந்தில் - அமுதாவும் அன்னலட்சுமியும் அப்டேட்
அமுதாவை கிண்டலடித்த தீபா, வசமாக சிக்கிய செந்தில் - அமுதாவும் அன்னலட்சுமியும் அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்’.

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செந்திலுக்கு போன் வர அவன் போனை எடுக்காமல் இருக்கிறான். இதனால் அமுதா அவனிடம் யாரு போன்ல என கேக்க, என் பிரண்டு தான் என சொல்ல, எடுத்து பேச வேண்டியது தான என சொல்ல, இல்ல இல்ல வேண்டாம் என செந்தில் மறுக்கிறான்.

உடனே அமுதா ஏன் என் முன்னாடி பேசக் கூடாத அளவுக்கு அப்படி என்ன ரகசியம் என கேட்க செந்தில் இல்ல படிக்கிறப்ப டிஸ்டர்ப் ஆக கூடாதுல்ல அதான் எடுக்கலை என சொல்கிறான்.

அமுதா ஹெட்போனை மாட்டி ஒன்றை அவள் காதிலும் இன்னொன்றை செந்தில் காதில் மாட்டிவிட்டு போனை அட்டெண்ட் பண்ண சொல்கிறாள். செந்தில் போனை அட்டெண்ட் செய்ய, செந்திலின் தோழி தீபா செந்தில் நாம காலேஜ் படிக்கும் போது எப்படி இருந்தியோ அப்படியே இருக்கடா, இன்னும் கூட உன் கன்னத்துல குழி விழுதுடா என சொல்ல அமுதா அவனை முறைத்துப் பார்க்கிறாள்.

நாங்க எல்லாம் படிச்சி வயசான மாதிரி இருக்கோம், நீ இன்னும் ஸ்மார்ட்டாவே இருக்க, ஆனா நீ கல்யாணம் பண்ண பொண்ணுக்கு தான் மூக்கு இப்படி சப்பையா இருக்கு, கண்ணும் சைனீஸ் கண்ணு மாதிரி இருக்கு என சொல்ல செந்தில் சமாளித்து நான் அப்புறம் போன் பண்றேன் என போனை கட் செய்கிறான்.

பிறகு அமுதா அவனிடம் அவ என்னை மூக்கு சப்பையா இருக்கு அப்படி இப்படின்னு சொல்றா, நீங்க ஏன் ஒண்ணும் சொல்லாம இருக்கீக என கோபப்படுகிறாள். செந்தில் மூக்கு சப்பையாவா இருக்கு என அவள் மூக்கை தொடப் போக, நான் இப்ப படிக்க வந்திருக்கேன், வாத்தியார் இப்படி எல்லாம் நடந்துக்க கூடாது என சொல்கிறாள்.

பிறகு செந்தில் கிளம்பி செல்ல, அமுதா அவனிடம் வாத்தியாரும், படிக்கிறவகளும் எப்படி நடந்துக்குவாகன்னு தெரியுமில்ல, அப்படி நடந்துக்கோங்க என சொல்ல, செந்தில் சிரித்தபடி செல்கிறான்.

பிறகு புவனாவை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வர புவனா தனக்கு கல்யாணம் இப்போது வேண்டாம் என சொல்ல அனைவரும் கோபப்படுகின்றனர். அமுதா அவளுக்கு பிடிக்கலேன்னா வேண்டாம் என சொல்ல, அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். பிறகு அமுதா புவனாவிடம் என்ன காரணம் என கேக்க தான் ஒருவரை விரும்புவதாக சொல்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ‘அமுதாவும் அன்னலட்சுமியும்’ சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com