\
திரையுலகிலிருந்து விலகினார் தங்கல் பட நடிகை !

திரையுலகிலிருந்து விலகினார் தங்கல் பட நடிகை !

திரையுலகிலிருந்து விலகினார் தங்கல் பட நடிகை !
Published on

அமீர் கானின் தங்கல் படம் மூலம் பிரபலமான நடிகை சைரா வாசிம் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார். 

தங்கல் படத்தில் மல்யுத்த வீராங்கனையாக நடித்தவர் நடிகை சைரா வாசிம். அவரின் நடிப்பு ஒரே படத்தில் பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தந்தது. அப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் அவர் பெற்றிருந்தார். குறிப்பிட்ட படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் சைரா வாசிம் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த‌வர் ஆவார். 

இந்நிலையில், சைரா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 5 ஆண்டுகளுக்கு முன்பு தான் எடுத்த முடிவால் வாழ்க்கை மாறிவிட்டது என்றும் தான் செய்யும் வேலை மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டு திரையுலகிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். 

திரையுலக வாழ்க்கையால் மதத்துடனான உறவு பிரச்சனைக்குள்ளாவதாக தெரிவித்த அவர், இந்த வேலை தனக்கு ஒத்துவரவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com