\
"ஹேப்பி பர்த்டே அப்பா" - மகளுக்கு இளையராஜா பியானோ சொல்லிக்கொடுத்த வீடியோவை பகிர்ந்த யுவன்

"ஹேப்பி பர்த்டே அப்பா" - மகளுக்கு இளையராஜா பியானோ சொல்லிக்கொடுத்த வீடியோவை பகிர்ந்த யுவன்

"ஹேப்பி பர்த்டே அப்பா" - மகளுக்கு இளையராஜா பியானோ சொல்லிக்கொடுத்த வீடியோவை பகிர்ந்த யுவன்
Published on

இளையராஜாவின் 78-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ட்விட்டரில் தனது அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அப்பாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் “பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா” என்று பதிவிட்ட யுவன் ஷங்கர் ராஜா, அத்துடன் வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார். அதில் இளையராஜா, தனது பேத்தியும் யுவனின் மகளுமான சியா யுவனுக்கு ஹேப்பி பர்த்டே பாடலுக்கான இசையை பியானோவில் சொல்லி கொடுக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

இன்று தனது 78 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இளையராஜா 1976 ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜா தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ படத்திற்கு இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com