யுவனை வாழ்த்திய நடிகை அஞ்சலி

யுவனை வாழ்த்திய நடிகை அஞ்சலி
யுவனை வாழ்த்திய நடிகை அஞ்சலி

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை நடிகை அஞ்சலி ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இசை ரசிகர்களை வைத்திருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இளைஞர்கள் மத்தியில் இவரது காதல் பாடல்கள் தனி ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு பிசியாக இருந்த யுவன், இடையில் இசையுலகில் கொஞ்சம் இடைவெளி விட்டிருந்தார். அதன் பிறகு சமீபகாலமாக பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் யுவனை ட்விட்டர் பக்கத்தில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியுள்ளது. இதனை ‘யு1’ என குறிக்கும் வகையில் அவர் ட்விட்டரில் பேனர் அமைத்துள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நடிகை அஞ்சலி “ஒரு மில்லியனை எட்டியதற்கு வாழ்த்துகள் யுவன்” என குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். 

இது குறித்து யுவன் “ அனைவரின் அன்புக்கும் நன்றி. மிகுந்த மரியாதையும் அதிதமான அன்பையும் என் இதயத்தில் வைத்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 


 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com