யுவன் சங்கர் ராஜா தனது திரைப்பயணத்தில் 20 வருடத்தை நிறைவு செய்துள்ளார்.
1997-ம் ஆண்டு, டி சிவாவின் தயாரிப்பில் வெளிவந்த அரவிந்தன் என்ற படத்திற்கு இசையமைத்து தனது பயணத்தைத் தொடங்கினார் யுவன்சங்கர் ராஜா.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள, யுவன் ஷங்கர் ராஜா, தன் திரையுலகப் பயணத்தின் அனைத்து கட்டங்களிலும் துணை நின்ற ரசிகர்களுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
இசை உணர்வுபூர்வமானது என்று கூறியுள்ள யுவன் ஷங்கர் ராஜா, ”நான் ஒரு சிறந்த இசையமைப்பாளரின் மகன். என்னை வடிவமைத்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. இந்த இசை உணர்வை இறுதி வரை கொண்டு செல்வேன்,” எனவும் கூறியுள்ளார்.
தான் இசையமைத்த படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், பாடகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளராக 20வது ஆண்டை நிறைவு செய்துள்ள யுவன், தற்போது தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். இந்த ஆண்டு ‘கொலையுதிர் காலம்’ எனும் படத்தை இவர் தயாரிக்கவுள்ளார்.