இளைஞர்களின் ஃபேவரைட் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கும் திரைப்படம் ’கண்ணே கலைமானே’. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக யுவனை தேர்வு செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் பாடலாசிரியராக கவிஞர் வைரமுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சீனுராமசாமி மற்றும் யுவன்சங்கர் ராஜா வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்[பு வரும் ஜனவரி 19 முதல் தொடங்கயுள்ளது. உதயநிதி ஜோடியாக தமன்னா நடிக்கயுள்ளார். சமீபத்தில் தல அஜித்தின் ’விசுவாசம்’ திரைப்படத்தில் இருந்து யுவன் விலகியதால் அவரின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் யுவனின் புதிய படம் குறித்த இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களை மீண்டும் உற்சாகப்படுத்தியுள்ளது. உதயநிதியுடன் கைக்கோர்த்துள்ள யுவனின் கூட்டணி வெற்றி பெறுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.