சிவகார்த்திகேயனுக்கு தங்கையான யுடியூப் பிரபல நடிகை?
ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘Mr.லோக்கல்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் சகோதரியாக யுடியூப் பிரபலம் ஹரிஜா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘எரும சாணி’ என்ற யு டியூப் சேனல் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர் ஹரிஜா. யுடியூப் சேனல் மட்டுமல்லாமல் சில குறும்படங்களிலும் ஹரிஜா நடித்துள்ளார். தற்போது அதர்வாவின் ‘100’ மற்றும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘Mr.லோக்கல்’ திரைப்படத்தில் அவரின் சகோதரியாக ஹரிஜா நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை என்றாலும் விரைவில் ஹரிஜாவின் கேரக்டர் குறித்து தகவல் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் 13வது திரைப்படமான ‘Mr.லோக்கல்’ திரைப்படத்தை ‘சிவா மனசுல சக்தி’,‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கி வருகிறார். இப்படத்தில் இப்படத்தில் நயன்தாரா , ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. இப்படம் வரும் ஏப்ரலில் திரைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.