வெளியான சர்க்கார் டீசர்- திக்கு முக்காடும் யூடியூப்

வெளியான சர்க்கார் டீசர்- திக்கு முக்காடும் யூடியூப்

வெளியான சர்க்கார் டீசர்- திக்கு முக்காடும் யூடியூப்

மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ‘சர்கார்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில், விஜய் அரசியல்வாதியாக நடிக்கிறார் எனத் தெரிகிறது. படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலக்ஷ்மி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சர்காரின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் விஜய், மெர்சல் திரைப்படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது. சர்காரில் அரசியல் மெர்சலாக உள்ளது என பல்வேறு அரசியல் பஞ்ச்களை பேசி கைதட்டல் வாங்கினார். அதன்பின்னர் அவரின் மேடைப்பேச்சுக்கு பலரும் கலவையான விமர்சன கருத்துகளை முன்வைத்தனர். இந்நிலையில் சர்காரின் டீசர் அக்டோபர் 19ல் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில் ஆனந்த விகடன் பத்திரிகைக்கு பேட்டியளித்த  இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் "கூகுள் சி.ஈ.ஓ. சுந்தர் பிச்சைதான் சர்கார் படத்தில் இருக்கும் விஜய்யின் கதாப்பாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷன். அதனால்தான் விஜய்யின் கதாப்பாத்திரத்துக்கு சுந்தர் என பெயர் வைத்துள்ளேன்" என தெரிவித்திருந்தார். மேலும், இந்தப் படத்தில் விஜய்யின் கதாப்பாத்திரம் கொஞ்சம் வில்லத்தனம் கலந்ததாக இருக்கும் என கூறியிருந்தார். 

இந்நிலையில் யூடியூபில் சர்க்கார் பட டீசரை எவ்வளவு பேர் பார்த்துள்ளார்கள் என சரியாக காட்ட முடியவில்லை. இப்போது வரை 6700 மட்டுமே பார்த்தார்கள் என யூடியூப் காட்டியது. ஆனால் அதனை லைக் செய்தோர் 7 ஆயிரத்துக்கும் மேல். கமெண்டுகளோ 30 ஆயிரத்துக்கும் மேல் என இருந்தது. தற்போது ஒருவழியாக மீண்டு 50ஆயிரம் பார்வைகளை தாண்டியுள்ளதாக யூடியூப் காட்டுகிறது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com