சினிமா
”ஜெய் பீம் படத்தின் மீது நீங்கள் காட்டும் அன்பு அபரிதமானது: அனைவருக்கும் நன்றி”: சூர்யா
”ஜெய் பீம் படத்தின் மீது நீங்கள் காட்டும் அன்பு அபரிதமானது: அனைவருக்கும் நன்றி”: சூர்யா
”ஜெய் பீம் குழுவினருக்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் நன்றி” என்று நடிகர் சூர்யா நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருக்கிறார்.
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ’ஜெய் பீம்’பட சர்ச்சைக்கு சினிமாதுறையினர், ரசிகர்கள், அரசியல்வாதிகள் என சூர்யாவுக்கு பல தரப்பினரும் அறிக்கை வெளியிட்டும் வீடியோ வெளியிட்டும் ஆதரவாக இருக்கிறார். இந்த நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ”அன்பர்களே ஜெய் பீம் படத்தின் மீது நீங்கள் காட்டும் அன்பு அபரிதமானது.
இதற்குமுன் இதுபோன்று நான் பார்த்ததில்லை. நீங்கள் அனைவரும் எங்களுக்கு அளித்த நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டிற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை வாத்தைகளால் வெளிப்படுத்த முடியாது. ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருக்கிறார்.