ஜெயம் ரவியை இயக்கும் இளம் ரைட்டர்! யார் அவர்?

ஜெயம் ரவியை இயக்கும் இளம் ரைட்டர்! யார் அவர்?

ஜெயம் ரவியை இயக்கும் இளம் ரைட்டர்! யார் அவர்?
Published on

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தை இளம் கதாசிரியர் ஆண்டனி பாக்கியராஜ் இயக்க உள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு, வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வரும் நிலையில் இளம் கதாசிரியர் ஆண்டனி பாக்கியராஜிடம் கதை ஒன்றை கேட்டுள்ளார். இந்த ஆண்டனி பாக்கிய ராஜ் இரும்புத்திரை, ஹிரோ, விஸ்வாசம், உள்ளிட்ட பல வெற்றி படங்களில் வசனம், கதாசிரியராக பணியாற்றிய அனுபவம் உடையவர். ஆண்டனி சொன்ன கதை ஜெயம் ரவிக்கு மிகவும் பிடித்துப் போகவே, அந்த கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை “பூமி” படத்தை வெளியிட்ட ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். தற்போது படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அதற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சரியான நடிகர், நடிகைகளை தேர்வு செய்தபின் , விரைவில் படப்பிடிப்பை துவங்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com