\
”எனது கேரக்டரை ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்” : ‘ஜகமே தந்திரம்’ ஐஸ்வர்யா லட்சுமி

”எனது கேரக்டரை ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்” : ‘ஜகமே தந்திரம்’ ஐஸ்வர்யா லட்சுமி

”எனது கேரக்டரை ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்” : ‘ஜகமே தந்திரம்’ ஐஸ்வர்யா லட்சுமி
Published on

“ஜகமே தந்திரம் படத்தில் எனது கதாபாத்திரத்தை ரசித்தீர்கள் என்று நம்புகிறேன். மேலும், அதிக தமிழ் படங்களில் நடிப்பேன்” என்று தெரிவித்துள்ளார், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

 கடந்த 18 ஆம் தேதி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பாராட்டுக்களை குவித்து வருவது என்னவோ ஈழத்தமிழராக அட்டிலா கதாபாத்திரத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சிவதாஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஜோஜு ஜார்ஜின் நடிப்பும்தான்.

புலம்பெயர்ந்த அகதியாக உருக்கமான நடிப்பில் கவனம் ஈர்த்தார் ஐஸ்வர்யா லட்சுமி. தன்னுடைய வாழ்க்கை பின்னணியை தனுஷிடம் அவர் கோபத்துடன், உருக்கத்துடன் பேசும் காட்சிகள் அனைவரையும் கலங்க வைத்தது. அத்துனை சிறப்பான நடிப்பு.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஜகமே தந்திரம் படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கும் அன்பிற்கும் நன்றி, நீங்கள் அனைவரும் படத்தையும் எனது கதாபாத்திரத்தையும் மிகவும் ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். எதிர்காலத்தில் நிச்சயம் மேலும் தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கும் தனுஷ் சாருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com