'விஜய் 65' படத்தில் நடிகர் யோகி பாபு இணைந்துள்ளார்.
'மாஸ்டர்' பட வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கிறார். பூஜா ஹெக்டே, விஜய்க்கு ஜோடியாக நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், நடிகர் யோகி பாபு 'விஜய் 65' படத்தில் நடிக்கிறார்.
ஏற்கெனவே, 'வேலாயுதம்', 'மெர்சல்', 'சர்கார்', 'பிகில்' உள்ளிட்ட படங்களில் விஜய்யுடன் யோகிபாபு நடித்திருந்தார். அதேபோல, நெல்சன் திலீப்குமார் முதன்முதலாக இயக்கிய 'கோலமாவு கோகிலா' படத்திலும் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நெல்சனின் இரண்டாவது படமான 'டாக்டர்' படத்திலும் சிவகார்த்திகேயனுடன் நடித்திருக்கும் யோகிபாபு, மூன்றாவதாகவும் நெல்சன் படத்தில் 'விஜய் 65' படத்தின் மூலம் இணைந்துள்ளார். தற்போது யோகிபாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' பாராட்டுக்களைக் குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.