\
நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் யோகிபாபுவின் ’மண்டேலா’!

நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் யோகிபாபுவின் ’மண்டேலா’!

நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் யோகிபாபுவின் ’மண்டேலா’!
Published on

யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள ‘மண்டேலா’ திரைப்படம் தனியார் தொலைக்காட்சியிலும் ஓடிடி தளத்திலும் நேரடியாக வெளியாகவிருக்கிறது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு - ஷீலா ராஜ்குமார் நடித்துள்ள படம் ‘மண்டேலா’.  காமெடி நடிகராக மட்டுமே இருந்துவந்த யோகிபாபு ‘தர்மபிரபு’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அரசியல் நையாண்டியோடு சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரின் வசனங்களும் பாடல்களும் வரவேற்பை பெற்றன. இந்நிலையில், ’மண்டேலா’ படம் வரும் 4 ஆம் தேதி தனியார் தொலைக்காட்சியிலும், 5-ஆம் தேதி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸிலும் வெளியாகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com