’காசு கொடுத்தாதான் ஓட்டு’ - யோகி பாபுவின் 'மண்டேலா' டீசர் வெளியீடு!
யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள ’மண்டேலா’ படத்தின் டீசர் இன்று வெளியாகி இருக்கிறது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு - ஷீலா ராஜ்குமார் நடித்துள்ள ‘மண்டேலா’ திரைப்படம் நேரடியாக டிவியில் வெளியாகி ஓடிடியில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. காமெடி நடிகராக மட்டுமே இருந்துவந்த யோகிபாபு ‘தர்மபிரபு’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் ஹீரோவாக நடித்துள்ள ‘மண்டேலா’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முழுக்க முழுக்க அரசியல் நையாண்டியோடு இருக்கிறது ‘மண்டேலா’ டீசர்.
நெல்சன் மண்டேலா பெயரோடு வருகிறார் யோகிபாபு. ‘நோட்டாவாவது கோட்டாவாவது காசு கொடுத்தாதான் ஓட்டு’ என்று அவர் பேசும் வசனம் தற்கால அரசியல் சூழலையும் மக்கள் மனநிலையையும் பிரதிபலிக்கிறது. டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.